» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்
புதன் 31, ஜூலை 2024 3:20:20 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீருக்கு அடுக்கு விகித முறையில் கட்டணம் நிர்ணயம் உட்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் குடிநீர் இணைப்பு கட்டணம் அடுக்கு விகித முறையில் வசூலிப்பது, டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிப்பது உட்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் திமுக கவுன்சிலர் கனகராஜ் பேசும்போது, "குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மேயர், குடிநீர் இணைப்புகளுக்கு அளவு மானி இல்லாத காரணத்தினால் அடுக்கு விகித முறையில் கட்டணம் வசூலிக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது என்றார்.
மாநகராட்சி உறுப்பினர் சுரேஷ் பேசும்போது, "தூத்துக்குடி 2ஆம் கேட்டில் புதிதாக கட்டப்பட உள்ள திருமண மண்டபத்திற்கு முன்னாள் நகர்மன்ற தலைவர் என்.பெரியசாமியின் பெயரை சூட்ட வேண்டும் என்றார். இதற்கு அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த மேயர், இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மக்கள் கருத்து
வெங்கடேஷ்Jul 31, 2024 - 07:32:04 PM | Posted IP 162.1*****
எங்களது பகுதியில் மாடுகளின் தொல்லை அதிகமாக உள்ளது பன்னிரண்டாவது வார்டு ஸ்டேட் பாங்க் காலனி செவன்த் டே பள்ளி அருகில் வடபுறம் உள்ள தெருவில் மாமன்ற தலைவர் திரு ஜெகன் பெரியசாமி அவர்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் தயவு செய்து இதை பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
மேலும் தொடரும் செய்திகள்

உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

உண்மை விளம்பிAug 1, 2024 - 12:20:09 AM | Posted IP 172.7*****