» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாலை விபத்தில் உதவினால் ரூ.10ஆயிரம் பரிசுத் தொகை : ஆட்சியர் தகவல்!

திங்கள் 5, ஆகஸ்ட் 2024 5:10:04 PM (IST)

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்களுக்கு ரூ.10ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ரூ.5ஆயிரம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது. இதனை மேலும் ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் சாலைப் பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதலாக ரூ.5ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.10ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவசர கால உதவியினை பொதுமக்கள் செய்ய வேண்டும் என்பது ஆகும். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 5 முறை ஒரு நபருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். சாலை விபத்து நடந்த பின் காவல்துறையினர் அவ்விடத்தை பார்வையிட்டு விபத்தின் தன்மை குறித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவிப்பர். அனைத்து விபத்துகளும் மாவட்ட ஆட்சியரது தலைமையில் கீழ் இயங்கும் மாவட்ட அளவிலான மதிப்பீடு குழு ஆய்வு செய்யும். இதில் தேர்வு செய்யப்படும் நற்பண்பாளர்களுக்கு ரூ.10ஆயிரம் பரிசுத்தொகை வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

39வது தேசிய கண் தானே இரு வார நிறைவு விழா

வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:57:40 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory