» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாலையை ஆக்கிரமித்து செடி வளர்க்கும் கவுன்சிலர்: பேரூராட்சி அலுவலகம் முன்பே அரங்கேறும் அட்டூழியம்

செவ்வாய் 3, செப்டம்பர் 2024 8:14:18 PM (IST)

விளாத்திகுளத்தில் பேரூராட்சி அலுவலகம் முன்பே சாலையை ஆக்கிரமித்து கவுன்சிலர் செடி வளர்ப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து, 2-வது வார்டான சாலையம் தெருவிற்கு செல்லும் சாலையானது ஏற்கனவே குறுகலான சாலையாக இருப்பதாலும் NO PARKING ZONE -ல் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக நிறுத்தப்பட்டு இருப்பதாலும் அந்த சாலை வழியாக பள்ளி, மருத்துவமனைகளுக்கு செல்வதற்கும், நூலகத்திற்கு செல்வதற்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு இடையில் தான் சென்று வருகின்றனர். 

ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் இச்சாலையில், விளாத்திகுளம் பேரூராட்சி நான்காவது வார்டு கவுன்சிலர் சாலையில் சிறு சிறு தொட்டிகள் மூலம் செடிகளை வளர்ப்பதாகக்கூறி சாலையை ஆக்கிரமிப்பு செய்து தன்னுடைய கடை பேனர்களை வைத்து விளம்பரம் செய்து வருகிறார். விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பே நடக்கும் இந்த அட்டூழியத்தை இவ்வழியாக செல்லும் பேரூராட்சி அலுவலகத்திற்கு நாள்தோறும் சென்று வரும் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், செயல் அலுவலர் மகேஸ்வரன், பேரூராட்சி மேற்பார்வையாளர் மீனாட்சி சுந்தரம் போன்ற ஒருவரின் கண்களிலும் படவில்லை என்பது பலரது முனுமுனுப்பாக இருந்து வருகிறது. 

2-வது வார்டு பெண் வார்டு கவுன்சிலர் ஒருவரே இதுபோன்று பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சாலையை தனது சொந்த இடம் போல எண்ணி செடிகள் வளர்ப்பதும் தன்னுடைய கடை விளம்பர பேனர்களை வைப்பதுமாக அராஜகத்தில் ஈடுபட்டு வருவது விளாத்திகுளம் பகுதி மக்களிடையே பெரும் பேசும் பொருளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆகையால் உடனடியாக விளாத்திகுளம் காவல்துறை அதிகாரிகள் பொதுக்கள் செல்லும் சாலையில் இடையூறாக வைக்கப்பட்டுள்ள செடிகள் மற்றும் கடை விளம்பர பேனர்களை அகற்றி போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதும், அப்பகுதியில் NO PARKING ZONE ல் இருசக்கர வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

மக்கள் கருத்து

சண்முகம்Sep 4, 2024 - 11:10:41 AM | Posted IP 172.7*****

இது என்ன பிரமாதம் கட்டிட உரிமையாளர்கள் கழிவு நீர் கால்வாய் சாக்கடை தாண்டி சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடம்கட்டி அப்ரூவல் பதிவேற்றாத அங்கீகரிக்கப்படாத போர்வேல் ஆழ்துளைகிணறு ஐம்பது அடி தாண்டி 400 அடிக்கு மேல் போட்டு நீர் உறிஞ்சி மோட்டார்கள்ஒன்று ஒரு ஹெச் பிக்கு அதிகமாக பேரொளி இரைச்சல் சவுண்ட் போலிசன் மாசு ஏற்படுத்தி ஆக்கிரமிப்பு சாலையில் அமைத்து மேலும் நகரும் நீர்தேக்க சின்டெக்ஸ் பேரல்கள் அரசு நடைபாதையில் வைத்து சாக்கடை கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாத வகையில் நிரந்தரமாக வைத்து உள்ளனர். அதனை சில பேரூராட்சி நிர்வாகம் அனுமதிக்கிறது. சாக்கடை சுத்தம் செய்யாமலே பில் பாஸாகிறது. அதேபோல பழைய கட்டிடம் இடித்து புதிய கட்டிடம் கட்டி விற்பனை செய்வதில் சில பழைய பாழடைந்த கட்டிட மதிப்பில் வரிவிதிப்பு தொடர்ந்தும் பெயர் மாற்றங்கள் சில நடைபெறுகிறது . இதுவும் லஞ்சம் ஊழலில் ஒருவகையாகும். தீர்வு அனைத்து கட்டிடங்களும் வருவாய்துறை GEOLOGICAL INFORMATION SYSTEM உடன் காணோளி பதிவிட்டு உரிமையாளர் அல்லது பெயர்மாற்றாத தொடர்பு விளக்க உரிமையாளர் ஆதார் டிஜிட்டல் கைவிரல் ரேகை அல்லது கருவிழி ரேகை மறுபதிவேற்றம். மேலும் முரண்படுபவை மற்றும் சமீபத்திய பத்து ஆண்டுகளுக்குள்ள புதிய கட்டிடங்கள் உரிமையில்லாத கூடுதல் ஆக்கிரமிப்பு பகுதி கட்டிடப்பகுதி ஆக்கிரமிப்பு போர்வேல் அங்கீகரிக்கப்படாத போர்வேல் அண்டை வீடுகளின் விசாரணை காணோளிபதிவு வாய்மொழி பதிவு ஒப்புதல் பெற்று சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

சண்முகம்Sep 4, 2024 - 11:08:15 AM | Posted IP 162.1*****

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.

மேலும் தொடரும் செய்திகள்

39வது தேசிய கண் தானே இரு வார நிறைவு விழா

வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:57:40 PM (IST)

Sponsored Ads

Tirunelveli Business Directory