» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
வியாழன் 5, செப்டம்பர் 2024 3:44:43 PM (IST)

செங்கோட்டையில் விநாயகர் சதுா்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
நாடு முழுவதும் செப்-7ஆம் சனிக்கிழமை விநாயகர் சதுா்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருவதை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்காக செங்கோட்டை வேளாளா் தெருவில் மண்பாண்ட கூட்டுறவு சங்க கட்டிடத்தில் வைத்து சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படத வகையில் களிமண்ணால் உருவாக்கப்பட்ட விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணிகளை மண்பாண்ட தொழிலாளா்கள் மும்மரமாக செய்து வருகின்றனா்.
இது குறித்து சங்கத்தலைவா் ஆறுமுகம் வேளாளர் கூறுயதாவது இந்த சிலைகள் குறைந்த விலை. ரூ.500 முதல் 20ஆயிரம் வரை 7அடி உயரம் கொண்ட விநாயகா் சிலை ரூ.20ஆயிரம் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை தயாரிக்கும் பணிகளை நாங்கள் ஆண்தோறும் செய்து வருகிறோம் மேலும் இந்தாண்டு பல்வேறு வகையான வடிவத்தில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் முழுவதும் களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவைகளால் அமைக்கப்பட்டது.
இதில் ரசாயண கலவை ஏதும் கிடையாது இந்த சிலைகளை தண்ணீரில் கரைக்கும் போது தண்ணீர் மாசுபடியாது மேலும் பணத்திற்கு தகுந்தபடி சிறு சிறு வர்ணம் பூசாத சிலைகளும் சிறுவர்களுக்கு கேட்டும் விதம் செய்து கொடுக்கிறோம். இந்த தொழிலில் வேலைக்கு ஏற்றபடி தொழிலாளா்களுக்க ஊதியம் கிடைப்பது இல்லை. உபயோகப்படுத்தும் மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் வேலைப்பாடுகள் அதிகம் இருந்த போதிலும் இப்பணிகளை இறைப்பணியாக நினைத்து மனதுக்கு ஆறுதலுடன் காலகாலமாக செய்து வருகிறோம் எனக் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ஆய்வு
புதன் 1, ஏப்ரல் 2026 4:43:34 PM (IST)
_1775022580.jpg)
நெல்லையில் ஏப்.3-ல் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: இரண்டாம் கட்ட பயண விவரம் வெளியீடு!
புதன் 1, ஏப்ரல் 2026 11:19:44 AM (IST)

நெல்லை தம்பதியிடம் 15 பவுன் நகை பறிப்பு: தானே ரயில் நிலையத்தில் துணிகரம்!
புதன் 1, ஏப்ரல் 2026 8:35:50 AM (IST)

நெல்லையில் 2½ வயது பெண் குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ விசாரணை!
புதன் 1, ஏப்ரல் 2026 8:13:11 AM (IST)

எந்தத் தொகுதியில் நின்றாலும் நெல்லைக்கு செல்லப்பிள்ளை நான்: நயினார் நாகேந்திரன்
செவ்வாய் 31, மார்ச் 2026 3:48:10 PM (IST)

தென்காசி அருகே கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ: அரிய வகை மரங்கள் சாம்பல்- வனவிலங்குகள் பாதிப்பு?
திங்கள் 30, மார்ச் 2026 9:41:38 AM (IST)

