» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மண்டல சிலம்பம் போட்டி: ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி வெற்றி!

வியாழன் 5, செப்டம்பர் 2024 5:52:54 PM (IST)



கோவில்பட்டியில் நடைபெற்ற மண்டல அளவிலான சிலம்பம் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்றது.

கோவில்பட்டியில் எம்எஸ்எஸ்சி ஸ்போட்ஸ் சார்பில்  2024-2025 மண்டலம் 2 சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப் போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் சிவஹரி சங்கரன் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், மாணவர்கள்; ஹரி இளங்கவி, வெற்றி பிரகாஷ் ஆகியோர் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கமும், மாணவி அகல்யா மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கமும் பெற்றனர். 

இவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பதக்கங்கள் பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி, பள்ளி சீனியர் முதல்வர் ஜெயஜோதி பிளாரன்ஸ், முதல்வர் சௌமியா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory