» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

39வது தேசிய கண் தானே இரு வார நிறைவு விழா

வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:57:40 PM (IST)



ரோட்டரி அரவிந்த் கண் வங்கி, அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து 39வது தேசிய கண் தான இரு வார நிறைவு விழா கலையரங்கில் நடைபெற்றது.

திருநெல்வேலி மருத்துவ கல்லூரி டீன் ரேவதி பாலன் தலைமை தாங்கினார். அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஆர் மீனாட்சி அனைவரையும் வரவேற்றார். முக்கிய விருந்தினராக விஞ்ஞானி கூடங்குளம் அணுமின் நிலைய தள இயக்குனர் ஜாய் பி.வர்கீஸ் கலந்து கொண்டு கண் தானம் வழங்கிய குடும்பத்தினரை பாராட்டி சிறப்புரையாற்றினார். அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை ஆலோசகர் டாக்டர் ஆர். ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். 

திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவர் டாக்டர் வி ராமலட்சுமி, திருநெல்வேலி இந்திய மருத்துவக் கழக தலைவர் டாக்டர். சுப்பிரமணியன்,  அரிமா மாவட்ட ஆளுநர் லயன் சங்கரவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். கண் தானம் செய்த குடும்பத்தினருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. 

கண் தானம் பெற உதவி செய்த சிவகாசி பிரைட் விஷன் சாரிடபிள் டிரஸ்ட் டாக்டர் ஜெ.கணேஷ், பாவூர்சத்திரம் அரிமா சங்கம் கே.ஆர்.பி இளங்கோ, அண்ணாமலையார் பக்தர் குழு ஆர். ஐயப்பன் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். மிகச் சிறப்பாக விழிப்புணர்வு பணியாற்றிய கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியன் கவிஞர் சு முத்துசாமி ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கபட்டது. 

நிகழ்வில் அரசு சித்த மருத்துவக்கல்லூரி இணை பேராசிரியர். டாக்டர். சுபாஸ் சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக கருவிழி பிரிவு மருத்துவர் டாக்டர் திவ்யன் ஆபிரகாம் நன்றி கூறினார். ரோட்டரி கழகத்தினர், அரிமா சங்கத்தினர், கண் தானம் செய்த குடும்பத்தினர், பொதுமக்கள், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள், பெருந்திரளாக கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory