» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் செல்லப் பிராணிகள் திருட்டு அதிகரிப்பு: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

ஞாயிறு 8, செப்டம்பர் 2024 4:47:49 PM (IST)



தூத்துக்குடியில் வீடுகளில் வளர்க்கப்படும் விலை உயர்ந்த வெளிநாட்டு வகை செல்லப் பிராணிகளை சிறுவர்களை வைத்து திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வீடுகளில் நாய் பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வளர்ப்போர் தங்கள் வீடுகளில் உள்ள ஒருவரை போன்று செல்லப் பிராணிகளை வளர்ப்போர் மிகுந்த பாசத்துடன் குழந்தையை பாதுகாப்பது போன்று அதற்கான தனி அறை உணவுகள் மருத்துவ வசதி என வளர்த்து வருகின்றனர்  

இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு காட்டன் தெரு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் வீட்டில் விலை உயர்ந்த வெளிநாட்டு வகையை சேர்ந்த பக்(pug) என்ற நாயை தங்கள் குழந்தையை போல் வளர்த்து வந்துள்ளனர் நேற்று தங்கராஜின் வீட்டிற்கு வெளியே நாய் நின்று கொண்டிருந்தள்ளது சிறிது நேரத்தில் நாய் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இதை அடுத்து வீட்டில் மாட்டி இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். 

இதில் அந்தப் பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் முதியவர் ஒருவருடன் வந்த சிறுவன் வீட்டின் வெளியே தனியாக நின்றிருந்த நாயை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பாசமாக வீட்டில் குழந்தையை போல் வளர்த்த நாயை பறிகொடுத்த தங்கராஜ் குடும்பத்தினர் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் நாயை கண்டுபிடித்து தரும்படி சிசிடிவி காட்சிகளை காவல்துறையிடம் வழங்கி புகார் அளித்துள்ளனர்.

இதேபோன்று தூத்துக்குடி புது கிராமம் பகுதியில் தனது வீட்டில் செல்லப்பிராணியாக பூனையை வளர்த்து வந்த பெண் ஒருவர் தனது பூனையை காணவில்லை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூபாய் 5000 சன்மானமாக வழங்கப்படும் என தனது செல்போன் எண்ணுடன் தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளார். 

இவ்வாறு தூத்துக்குடி மாநகர பகுதிகளில் செல்ல பிராணிகளை திருடி ஒரு கும்பல் அதை திருட்டுத்தனமாக விற்பனை செய்து வருகிறது எனவே காவல்துறையினர் இந்த கும்பலை கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள் மற்றும் செல்ல பிராணிகள் வளர்போர் கோரிக்கை எடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

Common ManSep 9, 2024 - 05:46:22 AM | Posted IP 162.1*****

Neenga accused pidichi kuduthalum no action ... Complaint kudaka pona elanama papanga I am faced in tiruchendur station 2 years back same this issue

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory