» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அ.தி.மு.க. நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை: நடைபயிற்சி சென்றபோது கும்பல் வெறிச்செயல்!
திங்கள் 9, செப்டம்பர் 2024 8:33:00 AM (IST)
சங்கரன்கோவில் அருகே நடைபயிற்சிக்கு சென்ற போது அ.தி.மு.க. நிர்வாகியை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வெளியப்பன் (49). அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார். இவருடைய மனைவி மாரிச்செல்வி (45). இவர் மேலநீலிதநல்லூர் ஒன்றிய முன்னாள் துணை தலைவி ஆவார். வெளியப்பன் தினமும் நெல்லை - சங்கரன்கோவில் சாலையில் சர்வீஸ்ரோட்டில் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
அதுபோல் நேற்று காலையில் வெளியப்பன் நடைபயிற்சி செய்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த போது, ஒரு கும்பல் அவரை திடீரென்று வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. உடலில் பல்வேறு இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மகும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பனவடலிசத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட எஸ்பி சீனிவாசன், சங்கரன்கோவில் டிஎஸ்பி அறிவழகன், பனவடலிசத்திரம் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அதே நேரத்தில் வெளியப்பன் குடும்பத்தினர், உறவினர்களும் அங்கு திரண்டனர். அவரது உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து வெளியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் ஏதேனும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா? என்பது குறித்தும் ேபாலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
வெளியப்பனுக்கும், சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் வேறு ஏதாவது காரணங்கள் உண்டா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். எனினும் கொலையாளிகள் பிடிபட்ட பின்னரே கொலைக்கான முழு காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். சங்கரன்கோவில் அருகே அ.தி.மு.க. நிர்வாகி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்!
சனி 15, நவம்பர் 2025 12:44:52 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம் : திரளானோர் தரிசனம்!
சனி 15, நவம்பர் 2025 11:51:49 AM (IST)

கொலை முயற்சி, வழிப்பறியில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!
வெள்ளி 14, நவம்பர் 2025 5:31:34 PM (IST)

கூத்தன்குழியில் நவ.21ல் கடலம்மா மாநாடு : சீமான் அறிவிப்பு
வியாழன் 13, நவம்பர் 2025 4:29:46 PM (IST)

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் கோலாகலம்
வியாழன் 13, நவம்பர் 2025 12:44:11 PM (IST)

மதுவில் விஷம் கலந்து கொடுத்து பள்ளி ஆசிரியர் கொலை : பெண் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
புதன் 12, நவம்பர் 2025 5:50:21 PM (IST)




