» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி - நெல்லை பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம்: பயணிகள் உற்சாக வரவேற்பு!

திங்கள் 9, செப்டம்பர் 2024 10:17:28 AM (IST)



கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி - நெல்லை பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. 

திருநெல்வேலி -  தூத்துக்குடி பாசஞ்சர் ரயில் (ரயில் எண். 06668) பல போராட்டங்களுக்கு பின்பு மீண்டும் இன்று (செப்.9) முதல் மீண்டும் இயக்கப்பட்டு  காலை 08.15 மணிக்கு மணியாச்சி ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரயிலுக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா,  மணியாச்சி பஞ்சாயத்து தலைவர்  பிரேமா முருகன், மற்றும் பயணிகள் ரயில் வண்டிக்கு  வரவேற்பு அளித்து, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் மணியாச்சி  காவல் நிலையஆய்வாளர் மூக்கன்  மற்றும் தூத்துக்குடி இருப்புப் பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு வழங்கினார்கள்.  இந்த ரயில் வண்டி காலை 08.47 மணிக்கு  புறப்பட்டு 9.15 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையம் வந்தது.


மக்கள் கருத்து

பிச்சாண்டிSep 11, 2024 - 06:54:20 PM | Posted IP 162.1*****

நாகர்கோவில், கன்னியாகுமரி, திருநெல்வேலி வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வழி செய்தால் சென்னை செல்லும் மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்

மாமன்னனSep 11, 2024 - 12:53:15 PM | Posted IP 162.1*****

இடப்பற்றாக்குறை...தேவையற்ற ரயில்

பி.கண்ணாFeb 24, 1726 - 05:30:00 AM | Posted IP 162.1*****

இந்த ரயிலை வெற்றிகரமாக இயக்க ரயில்வே நிருவாகம் நல்ல முயற்ச்சியக தூத்துக்குடி டூ நாகர்கோயில் அல்லது திருவனந்தபுரம் வரை வாஞ்சிமணியாச்சி பைபாஸ் வழியாக நீட்டிப்பு செய்தால் முயற்சி பலன் தரும் அதேவேலையில் பயண நேரத்தை குறைத்தால் ஏலை நடுத்தர மக்களும் பயன் பெறுவார்கள் ரயில்வே மூன்றுமாவட்ட மக்களுக்காக சிந்திப்பார்களா

DurgadeviSep 10, 2024 - 08:08:29 PM | Posted IP 172.7*****

👌👍💐🙏👑

BalamuruganSep 10, 2024 - 08:06:12 PM | Posted IP 172.7*****

பயணிகள் கூட்டம் நன்றாகவே உள்ளது. வாஞ்சி மணியாச்சி பைபாஸ் ரயில் பாதைக்கு புதிதாக நடைமேடை அமைத்தால் மணியாச்சிக்கு அரைமணி நேரமும் அங்கிருந்து ஜங்சன் செல்ல அரைமணிநேரம் என மொத்தம் ஒரு மணிநேரத்தில் செல்லமுடியும் இப்படி இயக்கபட்டால் மெட்ராஸ்ல ரயில் போன்று மக்கள் ஆர்வத்துடன் பயன்படுத்துவர்.

DurgadeviSep 9, 2024 - 02:45:24 PM | Posted IP 172.7*****

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory