» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வாஞ்சிநாதன் பெயர் : இந்து முன்னணி கோரிக்கை!

திங்கள் 9, செப்டம்பர் 2024 3:08:47 PM (IST)



தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வாஞ்சிநாதன் பெயர் சூட்ட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு : இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கையில் வாஞ்சிநாதன் பங்கேற்றார். ஆங்கிலேயர் ஆட்சியல் திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் ராபர்ட் ஆஷ். இவர் வ.உ.சிதம்பரனார் சுதேசி நவாப் சங்கம் கப்பல் நிறுவனத்தை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக செயல்பட்டதால் வாஞ்சிநாதன் அவர்கள் ஆஷின் நடவடிக்கைகளை எதிரித்து வந்தார். 

1911-ம் ஆண்டு ஜீன் மாதம் 17ம் தேதி ஆஷ் துரையை திருநெல்வேலியிலிருந்து மணியாச்சியாக்கி வந்த இரயிலில் ஆஷ் இருந்ததை துரை நேரில் கண்டு தன்னுடைய கைதுப்பாக்கியை வைத்து சுட்டு கொன்றார். ஆங்கிலேயரால் தண்டனை பெறக்கூடாது என்று தன்னைத்தானே சுட்டுக்கொன்றார். இந்திய சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட அவருக்கு வாஞ்சிமணியாச்சியில் மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்க வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

உண்மை விளம்பிSep 9, 2024 - 10:23:18 PM | Posted IP 172.7*****

ஒரு ஆங்கிலேய கலெக்டரை மறைந்து இருந்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட ஒரு கோழையின் பெயரில் விமானநிலையமா! Shame

சிதம்பரம்Sep 9, 2024 - 08:32:34 PM | Posted IP 162.1*****

வ.வு.சிதம்பரனார் வானூர்தி நிலையம் பெயர் பொருத்தமாக இருக்கும்.

JOSEPHSep 9, 2024 - 04:59:48 PM | Posted IP 172.7*****

WE ASK THE NAME OF CHIDAMBARANAR AIR PORT

ARASAMUTHUSep 9, 2024 - 03:52:41 PM | Posted IP 172.7*****

VA VU Sidambaranar International Airport

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory