» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வாரிசு சான்றிதழ் கேட்டவரிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம்: இளநிலை உதவியாளர் கைது
வெள்ளி 27, செப்டம்பர் 2024 5:10:21 PM (IST)
நெல்லையில் வாரிசு சான்றிதழ் கேட்டவரிடம் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது இளநிலை உதவியாளர் அஜித் சண்முகநாதன் என்பவரை லஞ்ச ஒழிப்புதுறை ஆய்வாளர் ராபின் ஞானசிங் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.