» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென் மாவட்டங்களில் மாயமான ரயில்கள் மீண்டும் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

திங்கள் 30, செப்டம்பர் 2024 10:29:28 AM (IST)

தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளில் மாயமான ரயில்களை மீண்டும் இயக்கிட வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தென் மாவட்டங்களில் புதிய ரயில்கள் இயக்கிட கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை போதிய தண்டவாளங்கள் வசதிகள் இல்லை என தெற்கு ரயில்வே தெரிவித்து வந்தது. ஆனால் கடந்தாண்டு தென் மாவட்டங்களில் நாகர்கோவில் வரை இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டு, அதன் வழியாக ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. 

நாகர்கோவில் தொடங்கி சென்னை வரை இரட்டை ரயில் பாதைக்காக வழித்தடங்கள் உள்ளனர். எனவே புதிய இருப்புப்பாதை வசதிகளை கருத்தில் கொண்டு புதிய ரயில்களை இயக்காவிட்பாலும், கடந்த 10 ஆண்டுகளில் மாயமான ரயில்களையாவது மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் விரும்புகின்றனர்.

தென் மாவட்டங்கனை பொறுத்தவரை தூத்துக்குடி - கோயம்புத்தூர் தினசரி இரவு நேர ரயில், தூத்துக்குடி சென்னை பகல் நேர தினசரி ரயில், மயிலாடுதுறை தினசரி ரயில் உள்ளிட்ட ரயில்கள் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. இணைப்பு ரயில்கள் அடிப்படையில் இயக்கப்பட்ட இந்த ரயில்கள் இப்போது ஏத்து செய்யப்பட்டுவிட்டன. இந்த ரயில்களில் நல்ல கூட்டம் காணப்பட்ட நிலையில், இவற்றை மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

நெல்லை- கத்ரா வாராந்திர ரயில் மட்டுமின்றி, நாகர்கோவில் மங்களூர் ஏரநாடு தினசரி ரயில் ரத்து செய்யப்பட்டன. கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் ரயிலை தற்போது கன்னியாகுமரி - புனே என மாற்றி இயக்கி வருகின்றனர்.  மதுரை - டேராடுன் & சண்டிகர் இடையே வாரம் இருமுறை ஓடிய ரயில், தற்போது மதுரை -சண்டிகர் இடையே மட்டும் வாரம் இருமுறை இயக்கப்பட்டு வருகிறது. 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ரயில்வே கால அட்டவணையில் அறிவித்து விட்டு, சிறப்பு ரயிலாக இயக்கிய தாம்பரம் செங்கோட்டை அந்தியோதயா ரயிலையும் ரத்து செய்துவிட்டனர். இந்த ரயில் தொடர்ந்து இயக்கப்பட்டிருந்தால் தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் பயன டைந்திருப்பர். 

கடந்தாண்டு ரயில்களை இணைக்கிறோம் என்ற போர்வையில் செங்கோட்டை கொல்லம் இடையே இயக்கப்பட்ட ஒரே ஒரு பயணிகள் ரயிலையும் ரத்து செய்துவிட்டனர். நெல்லை- கொல்லம் வழித்தடத்தில் மீட்டர் கேஜ் காலக்கட்டத்தில், தினசரி 4 ரயில்கள் இயங்கி வந்தன தற்போது ஒரு ரயிலுக்கு கூட வழி இல்லை. 

எனவே அதில் ஒரு ரயிலையாவது இப்போது இயக்க முன் வரலாம். கடந்த 10 ஆண்டுகளில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டகளை மையமாக கொண்டு பல ரயில்கள் நிறுத்தப்பட்ட நிலையில், பயணிகள் முக்கிய நகரங்களுக்கு செல்ல திண்டாடுகின்றனர். எனவே இரட்டை ரயில் பாதை வசதிகளை பயன்படுத்தி மீண்டும் நிறுத்தப் பட்ட ரயில்களை இயக்கிட முன்வர வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.


மக்கள் கருத்து

மக்கள் நல விரும்பிOct 1, 2024 - 01:10:41 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி ரயில்வே பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் தூத்துக்குடி அருப்புகேட்டை மதுரை புதிய ரயில் பாதையாக மத்திய மாநில அரசாங்க விரைவாக முடிக்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory