» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாநில டென்னிஸ் போட்டிக்கு ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு

செவ்வாய் 8, அக்டோபர் 2024 3:28:53 PM (IST)



மாநில அளவிலான டென்னிஸ் போட்டிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு பெற்றனர்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் தென்காசி மாவட்ட அளவிலான டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இப் போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் முகமது அக்ஸின், சுப சக்திவேல் ஆகியோர் 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் முதலிடம் பெற்றனர்.

மேலும் 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் ஒற்றையர் பிரிவில் இப்பள்ளி மாணவி நிவேதிதா முதலிடமும், இரட்டையர் பிரிவில் மாணவிகள் நிவேதிதா, கார்த்திகா ஆகியோர் முதலிடமும் பெற்றனர். இவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க தேர்வு பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வன், சதீஸ்குமார், ராமர், கலையரசன், நாராயணன், பால்மதி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory