» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

புதன் 9, அக்டோபர் 2024 11:35:21 AM (IST)

கூடங்குளத்தில் சி.பி.எஸ்.சி., பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருநெல்வேலி மாவட்டம் கடற்கரை கிராமம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் உள்ளது. அதன் அருகில் செட்டிகுளத்தில் அணு மின் நிலைய பணியாளர்களுக்கான குடியிருப்பு வளாகம் உள்ளது. அங்கு சி.பி.எஸ்.சி., பள்ளி உள்ளது.

நேற்று பள்ளியின் இமெயிலில் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ஒருவரின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. பள்ளி நிர்வாகம், மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு தெரிவித்தனர். தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகம் முழுவதும் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர். குழந்தைகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.  ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை. இதுகுறித்து  கூடங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory