» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாடுகள் வளர்க்க அனுமதி பெற வேண்டும்: நெல்லை மாநகராட்சி அதிரடி உத்தரவு!
வெள்ளி 25, அக்டோபர் 2024 3:55:50 PM (IST)
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் வளர்க்க அனுமதி பெற வேண்டும் என ஆணையாளர் சுகபுத்திரா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நெல்லை மாநகர சாலைகளில் சுற்றி திரியும் மாட்டின் உரிமையாளர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும், மாடுகளின் உரிமையாளர்கள் மீது பிராணிகள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்திற்கு இடையூறாக அச்சுறுத்தலாக சாலையில் மாடுகளை அவிழ்த்துவிடக் கூடாது. நகர்ப்புற உள்ளாட்சி சட்டம் 1988ன் படி மாநகராட்சி எல்லைக்குள் அனுமதி இன்றி யாரும் மாடுகள் வளர்க்க கூடாது என ஆணையர் தெரிவித்துள்ளார்.