» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விபத்தில் இறந்த காவல் உதவி ஆய்வாளர் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் அஞ்சலி!

சனி 26, அக்டோபர் 2024 5:10:40 PM (IST)



விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பையா குடும்பத்திற்கு ரூ.25 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆகியோர் அன்னாரின் குடும்பத்தினரிடம் வழங்கினர்.

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் விக்கிரமசிங்கபுரம் கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த திரு சுப்பையா காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல் தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் இரவு வீடு திரும்பும் போது 21.10.2024 அன்று எதிர்பாராவிதமாக சாலை விபத்து ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு முதல் உதவிக்காக அம்பாசமுத்திரம் தீர்த்தபதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்கள்.பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரும் மூளை சாவு அடைந்ததாக மருத்துவர்களால்; தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அன்னாரின் குடும்பத்தார்கள் தானாக முன்வந்து அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து அன்னாரின் உடல் உறுப்புகளான கல்லீரல் சிறுநீரகம் தோல் மற்றும் கருவிழிகள் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த சுப்பையா குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் இரங்கல்களை தெரிவித்தது மட்டுமல்லாமல் அவரது குடும்பத்திற்கு ரூபாய் 25 இலட்சத்திற்கான நிதி உதவியையும் வழங்க உத்தரவிட்டார். 

அதன்படி வி.கே.புரம் கொட்டாரம் பகுதியில் உள்ள அண்ணாரது இல்லத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆகியோர் நேரில் சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்தி நிதி உதவிக்கான காசோலையினை வழங்கி அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல்களை தெரிவித்தார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory