» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

செவ்வாய் 29, அக்டோபர் 2024 11:12:17 AM (IST)



திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண வைபவம் இன்று அதிகாலையில் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் புகழ்பெற்ற சிவாலயமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாண திருவிழா நடத்தப்படுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. 

15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சி திருக்கல்யாண வைபவம் இன்று அதிகாலை கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவை யொட்டி நேற்று சம்பா நதியில் ஒற்றை காலில் தபசு இருக்கும் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சென்று காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு நெல்லையப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். அதன் பிறகு அம்மன் கோவிலில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி திருநீறு பூசி வெண்பட்டு உடுத்தி ஒற்றை காலில் தபசு இருந்த காந்திமதி அம்பாள் மேளதாளம் முழங்க பக்தர்களுக்கு அருள் பாலித்த பிறகு மண்டபத்தில் எழுந்தருளி சுவாமி திருக்காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.

நேற்று முதலே நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நிலையில் இன்று அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் வருகை தந்தனர். நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!

திங்கள் 30, டிசம்பர் 2024 4:59:25 PM (IST)

Sponsored Ads




Tirunelveli Business Directory