» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டரி வாகனம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 25, நவம்பர் 2024 5:47:10 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் கட்டணமில்லா பேட்டரி வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (25.11.2024) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், தலைமையில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப மனுக்கள் பதிவு செய்யப்பட்டதோடு, அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொது பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.
மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் கொக்கிரகுளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எளிதாக வந்துசெல்லும் வகையில் ரூ.3.5 இலட்சம் மதிப்பிலான கட்டணமில்லா பேட்டரி வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, மாவட்ட ஊருக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா, மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

குற்றால அருவிகளில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:12:10 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:56:47 AM (IST)

இரட்டிப்பு லாபம்: ஆசை வார்த்தை கூறி கல்லுாரி முதல்வரிடம் ரூ.17 லட்சம் மோசடி!
சனி 18, அக்டோபர் 2025 9:34:54 PM (IST)

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு: நெல்லையில் பரிதாபம்!
சனி 18, அக்டோபர் 2025 5:25:48 PM (IST)

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)
