» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சாகர்மித்ரா பணியாளர்களாக விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் இளம்பகவத் தகவல்
செவ்வாய் 31, டிசம்பர் 2024 3:09:21 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் ஒப்பந்த அடிப்படையில் மீனவர்நலத் துறையில் சாகர்மித்ரா பணியாளர்களாக பணிபுரிந்திட விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்நோக்கு சேவை ஊழியர்களாக தூத்துக்குடி மாவட்டம் வெள்ளப்பட்டி மற்றும் பழையகாயல் மீனவ கிராமங்களில் ஒப்பந்த அடிப்படையில் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறையில் சாகர்மித்ரா பணியாளர்களாக பணிபுரிந்திட 01.07.2024 அன்றைய தேதியில் 35 வயது நிறைவடையாத மீன்வள அறிவியல் (Fisheries Science) / கடல் உயிரியல் (Marine Biology) /விலங்கியல் (Zoology) பட்டப்படிப்பு / பன்னிரெண்டாம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்று தூத்துக்குடி வடக்கு மற்றும் வேம்பார் மீனவ கிராம சுற்று வட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் தகுதியான நபர்கள் 07.01.2025 அன்றைய தினத்திற்குள் விண்ணப்பித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு வடக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 0461-2320458 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புழல் சிறையிலிருந்து தாக்கல் செய்த ஹரி நாடார் மனு தள்ளுபடி: தேர்தல் அலுவலர் அதிரடி!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 9:07:53 PM (IST)

நெல்லையில் விஜய் பிரசாரத்திற்கு 51 நிபந்தனைகள்: செங்கோட்டையன் பேட்டி
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 4:07:26 PM (IST)

திருநெல்வேலி காவல் நிலையங்களை தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:40:09 AM (IST)

விசாரணைக் கைதி உடல் எரிப்பு வழக்கு: ஏடிஎஸ்பி, டிசி உள்ளிட்ட 13 போலீஸ் அதிகாரிகள் விடுதலை!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 8:47:49 AM (IST)

மருமகளைக் கேலி செய்ததைத் தட்டிக்கேட்டவர் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் சிறை!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 8:46:20 AM (IST)

நெல்லையில் பறக்கும் படை சோதனைகள் தீவிரம்: தேர்தல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:09:14 PM (IST)


Pravin kumar.sJan 7, 2025 - 06:55:06 PM | Posted IP 172.7*****