» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மருமகளைக் கேலி செய்ததைத் தட்டிக்கேட்டவர் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் சிறை!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 8:46:20 AM (IST)
அம்பாசமுத்திரம் அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நெல்லை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (56), விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கணேசன் (45) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி, ராஜகோபாலின் மருமகளைக் கணேசன் அவதூறாகப் பேசியுள்ளார். இதனை ராஜகோபால் தட்டிக்கேட்டபோது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேசன், அரிவாளால் ராஜகோபாலைச் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தடுக்க முயன்ற ராஜகோபாலின் மகன் கண்ணனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இந்தக் கொலை குறித்து அம்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து கணேசனைக் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கதிரவன் நேற்று இறுதித் தீர்ப்பு வழங்கினார்.
அதில், குற்றம் சாட்டப்பட்ட கணேசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், இதர குற்றங்களுக்காக 13 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ. 4,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் காளிமுத்து ஆஜரானார்.
இந்த வழக்கில் திறம்படப் புலனாய்வு செய்து, சாட்சிகளைச் சரியாக ஆஜர்படுத்திக் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்த அம்பை டிஎஸ்பி கணேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சண்முகவேல், முன்னாள் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் ஏட்டு செல்வி ஆகியோரை மாவட்ட எஸ்பி பிரசன்னகுமார் பாராட்டியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குப்பதிவு நாளன்று தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:10:16 PM (IST)

நண்பகலில் வெளியில் செல்வதை தவிர்க்கவும்: பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:28:42 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி: தேர்தல் பார்வையாளர்கள், ஆட்சியர் ஆய்வு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:33:24 AM (IST)

நெல்லையில் தேர்தல் பணிகள் தீவிரம்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ஆம் கட்டப் பயிற்சி!
புதன் 15, ஏப்ரல் 2026 4:16:15 PM (IST)

தோரணமலையில் விவசாயிகளுக்குக் கௌரவம்; சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா!
புதன் 15, ஏப்ரல் 2026 10:22:23 AM (IST)

திட்டமிட்ட துப்பாக்கிச் சூடா? - சிசிடிவி காட்சிகளால் ஆலங்குளம் விவகாரத்தில் திடீர் திருப்பம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:04:49 AM (IST)

