» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கணவருடன் பைக்கில் சென்றபோது சாலையில் தவறி விழுந்த பெண் லாரி சக்கரத்தில் சிக்கி பலி!!
வெள்ளி 10, ஜனவரி 2025 8:37:49 AM (IST)
செங்கோட்டையில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலையில் தவறி விழுந்த பெண் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கேசவபுரம் நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். கூலித் தொழிலாளியான இவரது மனைவி முப்புடாதி (40). இவர் தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வந்தார். முருகேசனின் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு தென்காசியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை பார்ப்பதற்காக முருகேசன் தனது மனைவி முப்புடாதியுடன் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு தாயை பார்த்து விட்டு 2 பேரும் நேற்று முன்தினம் இரவில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். செங்கோட்டை பழைய சினிமா தியேட்டர் அருகில் மெயின் ரோட்டில் வந்தபோது, மோட்டார் சைக்கிள் திடீரென்று நிலைதடுமாறியது. இதில் 2 பேரும் தவறி கீழே விழுந்தனர்.
அந்த சமயத்தில் பின்னால் இருந்து கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியின் சக்கரம் கண்இமைக்கும் நேரத்தில் முப்புடாதி தலையில் ஏறிஇறங்கியது. இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த முருகேசன் அதிர்ச்சி அடைந்து அலறினாா். இந்த விபத்து குறித்து செங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முப்புடாதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)
