» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருவள்ளுவர் தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!

சனி 11, ஜனவரி 2025 10:03:27 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்டத்தில் 15.01.2025 (புதன்கிழமை) திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள் (FL1 உரிமங்கள்) அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த FL2, FL3, FL3A, FL3AA & FL11 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. 

எனவே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 15.01.2025 (புதன்கிழமை) திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory