» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் தொடங்கியது

வியாழன் 22, ஜனவரி 2026 5:39:39 PM (IST)



பாரதியார் தின மற்றும் குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் நான்கு நாட்கள் நடைபெறவுள்ள மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் திருநெல்வேலி  சீவலப்பேரி நீச்சல் வளாகத்தில் தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் வளாகத்தில் இன்று (22.01.2025) பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவில் நடைபெறும் பாரதியார் தின மற்றும் குடியரசு தின நீச்சல் போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.சிவகுமார் தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில் விளையாட்டுத்துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அளவில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெறுவதற்காக மாநில அளவிலான போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.

தமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளி அளவிலான வருவாய் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட நீச்சல் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் மாநில அளவிலான நடைபெறும் நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளார்கள். இன்று முதல் 25.01.2026 வரை 4 நாட்கள் நடைபெறும் 47 வகையான பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளது. இன்றும், நாளையும் (23.01.2026) மாணவிகளுக்கான போட்டிகளில் 1471 மாணவிகளும், 24.01.2026 மற்றும் 25.01.2026 மாணவர்களுக்கான போட்டிகளில் 2172 மாணவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட நீச்சல் வீரர் பன்னாட்டு அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் M.S.நித்தீஷ் கலந்து கொண்டார். பென்டன் ரோகித் 50 மீட்டர் பட்டர்பிளை தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். இதுபோன்று பல்வேறு பிரிவுகளில் மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்ககல்வி) இ.ராமசாமி, திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சாய் சுப்புலட்சுமி, வள்ளியூர், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்ககல்வி) திருமுத்துராஜ், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சிவராஜ், தமிழ்நாடு நீர்நிலை விளையாட்டுக் கழகத் தலைவர் முனைவர் சேதுதிருமாறன், திருநெல்வேலி மாவட்ட நீச்சல் சங்கத்தின் செயலாளர் லட்சுமணன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெபராஜ், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory