» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.6 லட்சம் பொருட்கள் மீட்பு: துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு!
வியாழன் 22, ஜனவரி 2026 8:08:40 AM (IST)
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் கட்டளை சுப்பிரமணியன் (59). இவர், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நேற்று காலை தாம்பரம் வந்தார். அப்போது ரயிலில் இருந்து இறங்கும் அவசரத்தில் தனது பையை ரயிலிலேயே தவறவிட்டார். பின்னர், சிறிது நேரத்திற்கு பிறகு தனது பை காணாமல் போனதை கண்டு சுப்பிரமணியன் அதிர்ச்சியடைந்தார்.
இதுதொடர்பாக, தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தில் அவர் புகார் அளித்தார். அந்த பையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள், ரொக்க பணம், வங்கி கார்டுகள், 2 கைக்கெடிகாரங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். உடனடியாக தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினர், எழும்பூர் ஆர்.பி.எப். அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
உடனே, எழும்பூர் போலீசார் ரயில் எழும்பூர் வந்ததும், ரயிலில் சோதனை நடத்தி ரயிலில் இருந்த பையை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட பொருட்கள் எழும்பூர் ஆர்.பி.எப். அலுவலகத்தில் வைத்து சுப்பிரமணியனிடம் ஒப்படைக்கப்பட்டது. துரிதமாக செயல்பட்டு தனது வாழ்நாள் சேமிப்பு ஆவணங்களை மீட்டுக் கொடுத்த போலீசாருக்கு, சுப்பிரமணியன் நெகிழ்ச்சியுடன் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி நகை, செல்போன் பறிப்பு: தந்தை-மகன் கைது
வியாழன் 22, ஜனவரி 2026 8:10:07 AM (IST)

சேரன்மகாதேவியில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு போட்டி
புதன் 21, ஜனவரி 2026 8:28:01 PM (IST)

திருநெல்வேலியில் 1.3 கிலோ கஞ்சா பதுக்கியவர் கைது: பைக் பறிமுதல்!
புதன் 21, ஜனவரி 2026 5:02:15 PM (IST)

நெல்லையில் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!
புதன் 21, ஜனவரி 2026 3:32:52 PM (IST)

நெல்லை அருகே கூட்டம், கூட்டமாக வலசை வந்த வெளிநாட்டு பறவைகள்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:03:08 PM (IST)

நெல்லை அருகே அக்காவை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது: பரபரப்பு வாக்குமூலம்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:09:16 AM (IST)

