» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா 24ஆம் தேதி தொடங்குகிறது!

வியாழன் 22, ஜனவரி 2026 3:56:16 PM (IST)

உவரி ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 24ஆம் தேதி தொடங்குகிறது.  பிப்ரவரி 1ஆம் தேதி காலை பெரிய தேரோட்டமும் நடக்க உள்ளது.

இதையொட்டி அன்று காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. காலை 5.30 மணிக்கு யானை மீது கொடி பட்டம் ஊர்வலமும் தொடர்ந்து 7 மணிக்கு கொடி ஏற்றுதலும் நடக்கிறது.

தைப்பூச திருவிழா பிப்ரவரி 2ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை காலை 7 மணிக்கு விநாயகர் வீதி உலா வருதலும், 11.30 மணிக்கு உச்சகால பூஜையும், 12 மணிக்கு அன்னதானமும் இரவு 7 மணிக்கு சுவாமி வீதி உலா வரதலும், அதனைத் தொடர்ந்து சமய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
Also Read

முதல் நாள் இரவு 8 மணிக்கு சுவாமி இந்திர வாகனத்தில் வீதி உலா வருதலும், 25ஆம் தேதி கஜ வாகனத்திலும் 26 ஆம் தேதி அன்ன வாகனத்திலும், 27 ஆம் தேதி கைலாய பர்வதம் வாகனத்திலும், 28ஆம் தேதி காமதேனு வாகனத்திலும், 29ஆம் தேதி குதிரை வாகனத்திலும், 30ஆம் தேதி சட்டங்கால் சப்பரத்தில் சிவப்பு சாத்தி வருதலும், 31ஆம் தேதி சட்டங்கால் சப்பரத்தில் பச்சை சாத்தி சுவாமி வீதி உலா வருதலும் நடக்க உள்ளது.

31ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சுவாமி தங்க தேரில் வள்ளி தெய்வானையுடன் வீதி உலா வருதலும், பிப்ரவரி 1ஆம் தேதி காலை 7.00 மணிக்கு பெரிய தேரோட்டமும் நடக்க உள்ளது. இரவு 11 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிப்ரவரி 2ஆம் தேதி இரவு 10 மணிக்கு தெப்ப திருவிழா நடக்க உள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு உவரி சுயம்புலிங்க சுவாமி அன்னதான சேவா அறக்கட்டளை சார்பில் காலை முதல் அன்னதானம் நடக்க உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory