» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஆட்சியர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்!
சனி 25, ஜனவரி 2025 5:18:20 PM (IST)

திருநெல்வேலியில் அன்பாடும் முன்றில் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி அரங்கில், அன்பாடும் முன்றில் திட்டத்தின் கீழ் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இன்று (25.01.2025) தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு அன்பாடும் முன்றில் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களின் பல்வேறு வாய்ப்புகள் வசதிகள் பற்றி அறிந்து கொள்வதற்காக தமிழ்நாடு டெக்னோ க்ராட் இந்தியா காலேஜ் பைண்டர் நிறுவனத்தின் தலைவர் நெடுஞ்செழியன் மூலம் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
உயர்கல்வியில் மாணவர்களுக்கு இருக்கும் ஏராளமான வேலை வாய்ப்புகள், மிகச் சிறந்த ஐஐடி, ஐ.டி.எம், அரசு பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பன்னாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில ஏராளமான வாய்ப்புகள் உள்ளது குறித்தும் அவற்றை திருநெல்வேலி மாவட்ட மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது போன்று வழிகாட்டுதல்களை வழங்கினார்.
மேலும், தற்போதைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை எவ்வாறு தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதையும், உயர்கல்வியில் பல்வேறு சாதனை புரிந்தவர்களை உதாரணம் சுட்டிகாட்டி பயிற்சி வகுப்பினை காலேஜ் பைண்டர் நிறுவனத்தின் தலைவர் நெடுஞ்செழியன் மேற்கொண்டார்கள்.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் மிகுந்த ஆர்வத்தோடு கலந்து கொண்டு பயன்பெற்றனர் பயிற்சி வகுப்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பெரும் செலவு செய்து வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் இது போன்ற அரிய வாய்ப்பை இலவசமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கும் கிடைக்க அன்பாடும் முன்றில் திட்டம் மூலம் ஏற்பாடு செய்திருந்தது. மாணவர்களை பல்வேறு இடங்களில் இருந்து அரசு பொறியியல் கல்லூரி அரங்குக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அன்பழகன், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் லதா உட்பட மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை ஜாகிர் உசேன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு
புதன் 26, மார்ச் 2025 4:06:47 PM (IST)

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானது: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
புதன் 26, மார்ச் 2025 10:58:11 AM (IST)

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
செவ்வாய் 25, மார்ச் 2025 5:28:42 PM (IST)

நெல்லை சரக டிஐஜி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
செவ்வாய் 25, மார்ச் 2025 4:32:51 PM (IST)

திருநெல்வேலியில் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சி முகாம்: ஏப்.1ம் தேதி துவங்குகிறது!
செவ்வாய் 25, மார்ச் 2025 12:30:33 PM (IST)

கடந்த 3 மாதங்களில் நாட்டிலேயே அதிக மழையை பெற்றுள்ள தென் மாவட்டங்கள்!
திங்கள் 24, மார்ச் 2025 8:32:18 PM (IST)
