» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் : ரயில்வே ஊழியர் உட்பட 2பேர் கைது!!
ஞாயிறு 26, ஜனவரி 2025 1:48:38 PM (IST)
நெல்லை அருகே இளம்பெண்ணுக்கு மதுபானம் கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை அருகே மானூரை அடுத்த வெங்கலபொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் மகன் சுபாஷ் (37). இவர் நெல்லையில் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு புதுச்சேரியைச் சேர்ந்த 29 வயதான இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று ஜெபக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த அந்த இளம்பெண், சுபாஷை தொடர்பு கொண்டு பேசினார்.
தொடர்ந்து இளம்பெண்ணை சுபாஷ் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு இளம்பெண்ணுக்கு மதுபானம் வாங்கி கொடுத்த சுரேஷ் பின்னர் அவரை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு சுபாஷின் நண்பரும், அரசு பஸ் டிரைவருமான மானூர் ரஸ்தாவைச் சேர்ந்த பிச்சையா மகன் முருகேஷ் (37) என்பவரும் வந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பித்து செல்ல முயன்றார்.
ஆனால் அவர்கள் அந்த இளம்பெண்ணை வீட்டில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பித்து, நெல்லை தாலுகா அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சுபாஷ், முருகேஷ் ஆகியோர் மீது கூட்டு பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 19 புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் : ஆட்சியர் ஆணை வழங்கினார்!
புதன் 26, மார்ச் 2025 5:21:43 PM (IST)

நெல்லை ஜாகிர் உசேன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு
புதன் 26, மார்ச் 2025 4:06:47 PM (IST)

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானது: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
புதன் 26, மார்ச் 2025 10:58:11 AM (IST)

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
செவ்வாய் 25, மார்ச் 2025 5:28:42 PM (IST)

நெல்லை சரக டிஐஜி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
செவ்வாய் 25, மார்ச் 2025 4:32:51 PM (IST)

திருநெல்வேலியில் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சி முகாம்: ஏப்.1ம் தேதி துவங்குகிறது!
செவ்வாய் 25, மார்ச் 2025 12:30:33 PM (IST)
