» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தமிழகத்தில் 9 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்: நெல்லை ஆட்சியராக ஆர்.சுகுமார் நியமனம்!

வெள்ளி 31, ஜனவரி 2025 4:59:32 PM (IST)

நெல்லை உட்பட 9 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த கார்த்திகேயன் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக ஆர்.சுகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • தருமபுரி மாவட்ட ஆட்சியராக சதீஷ் நியமனம்
  • திண்டுக்கல் ஆட்சியராக சரவணன் நியமனம்
  • கிருஷ்ணகிரி ஆட்சியராக தினேஷ்குமார் நியமனம்
  • விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம்
  • திருவண்ணாமலை ஆட்சியராக தர்ப்பகராஜ் நியமனம்
  • திருப்பத்தூர் ஆட்சியராக மோகனசந்திரன் நியமனம்
  • திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி வணிகவரித்துறையின் இணை ஆணையராக பணியிட  மாற்றம் 
  • தருமபுரி ஆட்சியர் சாந்தி, பட்டுப்பூச்சி வளர்ப்பு துறை இயக்குநராக பணியிட  மாற்றம் 
  • தொழில் நுட்ப கல்வி ஆணையராக இன்னசண்ட் திவ்யா நியமனம்
  • கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக கண்ணன் நியமனம்
  • நகராட்சி நிர்வாக இணை ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரி லலித் ஆதித்ய நீலம் நியமனம்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory