» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆக்ஸ்போர்டு பள்ளியில் மாதிரி பள்ளி முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடல் : ஆட்சியர் பங்கேற்பு

சனி 1, பிப்ரவரி 2025 8:13:43 PM (IST)



தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாதிரி பள்ளி முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் கலந்து கொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் அரசு பள்ளி களில் பயிலும் மாணவர்கள் கல்வி, நுண் கலை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான மாதிரி பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த மாதிரி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் வழி காட்டுதல், உயர் கல்வி தேர்வு தொடர்பான கண்காட்சி மற்றும் மாதிரி பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களின் அனுபவங்கள் குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ கே கமல் கிஷோர் தலைமை தாங்கி மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினா வரவேற்று பேசினார். மாதிரி பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது அவர்கள் மாதிரி பள்ளிகளில் பயின்றதால் தாங்கள் சிறப்பாக உயர்கல்வியை தேர்வு செய்ய முடிந்தது என்று தெரிவித்தனர். அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கருத்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலர் அமலா தங்கத்தாய் (இடைநிலை), தென்காசி மாவட்ட அரசு மாதிரி பள்ளி தலைமையாசிரியர் சுப்பிரமணிய துரை, அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள், மாதிரி பள்ளி முன்னாள் மாணவர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினா, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பூங்கொத்து, பொன்னாடை அணிவித்து வரவேற்றார். முடிவில் மாவட்டக் கல்வி அலுவலர் ஜெயப்பிரகாஷ் ராஜன் (தொடக்கக்கல்வி) நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory