» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பஸ்சில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கொத்தனார் கைது!
திங்கள் 3, பிப்ரவரி 2025 9:09:27 PM (IST)
நெல்லை அருகே பஸ்சில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை அருகே உள்ள மணப்படைவீடு பகுதியில் இருந்து சம்பவத்தன்று காலையில் அரசு பஸ் ஒன்று நெல்லை சந்திப்பிற்கு புறப்பட்டது. அந்த பஸ்சில் இளம் பெண் ஒருவர் தனது தாயாருடன் ஏறினார். அப்போது அவர்களுக்கு பின்னால் அமர்ந்து இருந்த நபர் ஒருவர் அந்த இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த முத்துபட்டன் (40) என்பதும் கொத்தனார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.