» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தீவிபத்து எதிரொலி : அனுமதியின்றி இயங்கிய தீப்பெட்டி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு
புதன் 19, பிப்ரவரி 2025 12:02:42 PM (IST)
சங்கரன்கோவிலில் அனுமதியின்றி இயங்கிய தீப்பெட்டி தொழிற்சாலைக்கு தாசில்தார் தலைமையிலான குழுவினர் சீல் வைத்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை 4-வது தெருவில் நந்தகுமார் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் மருந்து தடவிய தீக்குச்சிகள் அங்குள்ள குடோனில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அங்கு வேலை செய்துகொண்டிருந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதறியடித்து அங்குள்ள பல்வேறு பாதை வழியாக அங்கிருந்து வெளியேறினர். இது தொடர்பாக சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ மேலும் கொழுந்துவிட்டு எரிந்ததால் கட்டிடத்தின் ஒரு பகுதி சுவரை இடித்து, அதன் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்தின் போது தொழிலாளர்கள் உடனே வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான தீக்குச்சி மூடைகள் எரிந்து சாம்பலானது.
விபத்து குறித்து சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து அவர் தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்று விசாரணை நடத்தினார். அப்போது தீப்பெட்டி தொழிற்சாலை உரிய அனுமதியின்றி செயல்பட்டதும், அங்கு பாதுகாப்பு உபகரணங்கள் செயல்படாமல் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தீப்பெட்டி தொழிற்சாலைக்கு சங்கரன்கோவில் தாசில்தார் தலைமையிலான குழுவினர் சீல் வைத்தனர். இதனிடையே தகவல் அறிந்து அங்கு ராஜா எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, நகர் மன்ற துணைத்தலைவர் கண்ணன் என்ற ராஜூ ஆகியோர் விரைந்து சென்று அங்கிருந்த தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 3, ஜூலை 2025 8:52:46 AM (IST)

சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவி பதவி இழந்தார்: சொந்த கட்சி கவுன்சிலர்களே கவிழ்த்தனர்!
வியாழன் 3, ஜூலை 2025 8:51:16 AM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

விதிமீறல் : பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!
புதன் 2, ஜூலை 2025 11:29:00 AM (IST)

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)
