» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தண்ணீருக்குள் குழந்தை விழுந்த சிசிடிவி காட்சிகள் : இடத்தின் உரிமையாளரை தேடும் மாநகராட்சி!

புதன் 12, மார்ச் 2025 12:44:42 PM (IST)



தூத்துக்குடி கதிர்வேல் நகரில் தனியார் நிலத்தில் தேங்கிய தண்ணீருக்குள் குழந்தை விழுந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அந்த இடத்தின் உரிமையாளரை மாநகராட்சி அதிகாரிகள் தேடி வருகிறார்கள். 

இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக இதுபோன்ற தனியாருக்கு சொந்தமான பள்ளமான இடங்களில் மணல் கொண்டு நிரப்பி நீர் தேங்காதவாறு பலமுறை அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கியிருக்கிறோம். ஆகவே இதுபோன்ற சம்பவங்கள் மாநகரில் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். மேலும் மீண்டும் இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 


மக்கள் கருத்து

VINCENT JAYAKUMAR JMar 12, 2025 - 01:02:06 PM | Posted IP 172.7*****

குழந்தையின் பொறுப்பற்ற பெற்றோர் யார்? நாள் நடமாட்டம் இல்லாத மற்றும் வாகனங்கள் செல்லக்கூடியச் சாலை போல் இருக்கும் இடத்திற்கு குழந்தை எப்படி வந்தது யார் துணையுடன் என்பதை கண்டறிய வேண்டும் மாநகராட்சி நோட்டீஸ் வழங்கிய பின்பு இடத்தின் உரிமையாளரை தொடர் கண்காணிப்பு செய்ய மறந்த அலுவலக பணியாளர் மீது நடவடிக்கை என்ன?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory