» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கடந்த 3 மாதங்களில் நாட்டிலேயே அதிக மழையை பெற்றுள்ள தென் மாவட்டங்கள்!
திங்கள் 24, மார்ச் 2025 8:32:18 PM (IST)
கடந்த 3 மாதங்களில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் நாட்டிலேயே அதிக மழையை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் முடிவடைந்தது. ஆனாலும் அதன் பின்னரும் கடந்த 3 மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தென் மாவட்டங்கள் நல்ல மழையை பெற்றது.
தற்போது கோடைகாலமான மார்ச் மாதத்திலும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மழை தொடர்கிறது. இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களில் தென் மாவட்டங்கள் நாட்டிலேயே அதிக மழையை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஜனவரி 1 முதல் நேற்று வரையிலான காலத்தில் இந்தியாவிலேயே மிக அதிகமான மழை நெல்லை மாவட்டத்தில் பெய்துள்ளது.
இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலையை அடுத்த ஊத்து எஸ்டேட் பகுதியில் 1, 620 மில்லிமீட்டர் மழையை பெற்றுள்ளது. அதன் பின்னர் நாலுமுக்கு எஸ்டேட்டில் 1,424 மில்லிமீட்டர் மழையும், காக்காச்சியில் 1,225 மில்லிமீட்டர் மழையும் பெற்றுள்ளது.
இதனிடையே கடந்த 4 நாட்களாக அந்த பகுதிகளில் கனமழையால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று 3-வது நாளாக தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் குளிக்க விதித்த தடையை வனத்துறை நீட்டித்துள்ளது.
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்கள் கடந்த 3 மாதங்களாகவே அதிக மழையை பெற்றிருக்கிறது. ஜனவரி 1 முதல் இன்று வரையிலான காலத்தில் ராமேஸ்வரம் 464 மில்லிமீட்டர் மழையும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 239 மில்லிமீட்டர் மழையும், தென்காசி மாவட்டம் ராமநதி அணை பகுதி 228 மில்லிமீட்டர் மழையும் பெற்றிருக்கிறது என தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கோடைவெயில் கொளுத்தி வரும் நிலையில் தென் மாவட்டங்களின் வெப்பநிலை தொடர்ந்து இயல்பை விட குறைவாகவே பதிவாகி வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களாகவே இயல்பை விட வெப்பநிலை குறைந்துள்ளது.
மார்ச் மாதத்தை பொறுத்தவரை திடீர் மழை, வெயில், வானம் மேகமூட்டம் இவ்வாறு தொடர்ந்து வானிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடலோர பகுதியிலும் வடகிழக்கு பருவமழை காலம் போல மழை பெய்கிறது. இதே நிலை தொடரும்.
வரும் ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை உயர்ந்தாலும் தென் மாவட்டங்களில் கோடைமழை தீவிரமடையும். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏப்ரல் மாதத்தில் கோடைமழை தீவிரமாக இருக்கும் எனவும், மே மாதத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாவட்டங்களில் தீவிர கோடைமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)
