» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையங்கோட்டை அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம்

சனி 12, ஏப்ரல் 2025 8:31:50 PM (IST)



பாளையங்கோட்டை அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் தேரோட்ட திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தளங்களில் ஒன்றான ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாளையங்கோட்டையில் உள்ள அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி பிரம்மோத்ஸவ திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோத்ஸவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி கடந்த 3-ந்தேதி காலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் கொடியேற்றியதும் மகாதீபாராதனை நடைபெற்றது. மாலையில் தோளுக்கினியானில் ருக்மணி சத்யபாமா, ராஜகோபாலன் வீதியுலா நடைபெறுகிறது.

தொடர்ந்து 4-ந்தேதி இரவு 7 மணிக்கு யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்திலும், 5-ந்தேதி ராமர் அலங்காரத்தில் அனுமன் வாகனத்திலும், 6-ந்தேதி பரமபத நாதன் அலங்காரத்தில் ஆதிசேஷ வாகனத்திலும், 7-ந்தேதி வைகுண்டநாதன் அலங்காரத்தில் இரட்டை கருட சேவையிலும் பெருமாள் திருவீதியுலா வந்தார்.

சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்னதாக தேரோட்டத்தை முன்னிட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து ருக்மணி சத்தியபாமா சமேத ராஜகோபாலர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். பின்னர் தேரில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நான்கு ரத வீதிகளிலும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அவர்கள் கோவிந்தா கோபாலா கரகோஷம் விண்ணதிர முழங்கினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory