» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

செங்கோட்டையில் வாழ்ந்து காட்டுவோம் பயிலரங்கம்

திங்கள் 14, ஏப்ரல் 2025 7:07:23 PM (IST)



செங்கோட்டை அருகே உள்ள பூலாங்குடியிருப்பு எஸ். எஸ் ஆர்கானிக் கார்டனில் வாழ்ந்து காட்டுவோம் பயிலரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமையேற்றஎஸ் எஸ் ஆர்கானிக் கார்டனின் நிர்வாக இயக்குனர் பணி நிறைவு பெற்ற துணை வேளாண்மை அலுவலர் ஷேக்முகைதீன் வரவேற்புரை நிகழ்த்திபயிலரங்கத்தின் நோக்கம் பற்றி விளக்கினார்.

பணி நிறைவு பெற்ற வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்ரமணியம் இலக்கு, வெற்றிப் பயணம், கடின உழைப்பு,ஒழுக்கம், சுய கட்டுப்பாடுஉள்ளிட்ட தலைப்புகளில் உரையாற்றியதோடுகல்வி கற்கும் காலங்களில் மாணவர்கள் தங்களுடைய எதிர்கால திட்டங்களையும் வகுத்துக் கொள்ள வேண்டும் நவீன போட்டி உலகத்தில் மாணவர்கள் தங்களுடைய ஆற்றலை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி விளக்கி கூறினார்

படி -எழுது என்ற தலைப்பில் விழுதுகள் அறக்கட்டளையின் தலைவர் சேகர் *உரையாற்றினார்.மகிழ்ந்து வாழ் என்ற தலைப்பில் கவிதை பாடி கவிஞர் தளவாய் இளங்குமரன் அனைவரையும் உற்சாகப்படுத்தினார். தூங்கு எழு என்ற தலைப்பில் முன்னோடி விவசாயி செல்லத்துரை விளக்கி கூறினார்

நுண் கீரை வளர்ப்பு, வளர்ந்து வரும் சமூகத்தின் உணவு பழக்க வழக்கம் என்ற தலைப்பில் முன்னாள் வேளாண்மை ஆசிரியர் கோவில்பட்டி சுரேஷ்குமார் உரையாற்றினார். கடின உழைப்பும் வெற்றியும் என்ற தலைப்பில் பார்டர் ரஹ்மத் ஹோட்டல் நிர்வாக இயக்குனர் முகமது அசன் உரையாற்றினார். பண்ணை மேற்பார்வையாளர் அருண்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பலவேசம் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory