» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் 21வது பட்டமளிப்பு விழா: நிறுவனர் கிளிட்டஸ் பாபு பங்கேற்பு!
திங்கள் 14, ஏப்ரல் 2025 7:13:21 PM (IST)

நெல்லை வண்ணாரப்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 21வது பட்டமளிப்பு விழாவில் கல்லூரி நிறுவனர் கிளிட்டஸ் பாபு பங்கேற்றார்.
நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பொறி யியல் கல்லூரியில் நடைபெற்ற வெள்ளிவிழா ஆண்டு 21வது பட்டமளிப்பு விழாவில் ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, துணைத் தலைவர் அமலி கிளிட்டஸ் பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மவெரிக்ஸ் மற்றும் ஏவிபி ஏர்லி காரீயர்ஸ் அண்ட் ஹெக்சாவர் நிறுவன தலைமை ஆலோசகர் கிருஷ்ணா பாலகுருநாதன் பங்கேற்றார்.
ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு 21வது பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்துப் பேசினார். கல்லூரி முதல்வர் வேல்முருகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இதனைத் தொடர்ந்து, பட்டம் பெற்ற மாணவர், மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். விழாவில், 719 இளங்கலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். 29 மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசை சான்றிதழ்களைப் பெற்றனர். அதில் 13 பேர் தங்க பதக்கம், மற்றும் சான்றிதழ் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தேர்வு கட்டுப்பாடு அதிகாரி பேராசிரியர் ராஜகுமார் செய்திருந்தார். நிறைவாக கல்வி சார் பேராசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.
இவ்விழாவில், அனைத்து ஸ்காட் கல்வி குழும பொதுமேலாளர் (வளர்ச்சி) ஜார்ஜ் கிளிங்டன், பொதுமேலாளர் (நிர்வாகம் ) கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், இயக்குநர்கள் ஜான் கென்னடி, முகமது சாதிக், லூர்தஸ் பூபாலராயன் மற்றும் கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள்,பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அதிகாரியும், வளாக மேலாளருமான பேராசிரியர் சகரியா காபிரியேல் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 19, ஏப்ரல் 2025 12:52:34 PM (IST)

ஜவுளிக்கடை உரிமையாளர் தலை துண்டித்து கொலை: இளம்பெண் கைது
சனி 19, ஏப்ரல் 2025 9:03:58 AM (IST)

பொதுமக்களுக்கு உதவிட சட்டபணிகள் ஆணைய குழு தயார்: உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:32:31 PM (IST)

முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் பெண் கைது: 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:36:07 PM (IST)

வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.89.75 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:45:53 PM (IST)
