» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காவலரின் தாயை கொலை செய்து நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

செவ்வாய் 15, ஏப்ரல் 2025 8:35:37 AM (IST)

மெஞ்ஞானபுரம் அருகே காவலரின் தாயை கொலை செய்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தேரிப்பனையைச் சேர்ந்த ஜெயபால் மனைவி வசந்தா (70).  மகன் விக்ராந்த், நாசரேத் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வசந்தா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். 

அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை கொலை செய்து, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory