» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் ரூ.4 ஆயிரம் லஞ்சம்: மாநகராட்சி பில் கலெக்டர் கைது!

புதன் 16, ஏப்ரல் 2025 5:21:22 PM (IST)

திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.4ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் களவுமாக கைது செய்துள்ளனர். 

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பாலசிங்கம் பணியாற்றி வருகிறார். இவர், தந்தையின் பெயரில் உள்ள சொத்து வரியை தன் பெயரில் மாற்றுவதற்காக பில் கலெக்டர் காளி வசந்த் (27) என்பவரை அணுகினார். 

இதற்கு காளி வசந்த் ரூ.4 ஆயிரம் லஞ்ம் கேட்டு உள்ளார். இதனை கொடுக்க விரும்பாத பாலசிங்கம், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் லஞ்சப்பணத்தை பாலசிங்கத்திடம் இருந்து வாங்கிய காளி வசந்த்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory