» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.89.75 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்.

வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:45:53 PM (IST)



மறுகால்குறிச்சி கிராம ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.89.75 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மறுகால்குறிச்சி கிராம ஊராட்சியில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அவர்களின் மக்கள் தொடர்பு முகாமில் 171 பயனாளிகளுக்கு ரூ.89.75 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், வழங்கினார்.

இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை எளிய மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, பிறப்பு முதல் இறப்பு வரையிலான திட்டங்களும், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், மகளிர் உரிமைத்தொகை, முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், உள்ளிட்ட மாணவர்கள், மகளிர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பு மக்களுக்கும் அனைத்துவகை திட்டங்களும் மக்களை தேடி சென்று வழங்க வேண்டுமென்று பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று நாங்குநேரி வட்டம், மறுகால்குறிச்சி கிராம ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அரசின் திட்டங்கள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக ஒவ்வொரு துறையின் சார்பிலும் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

திருநெல்வேலி மாவட்டம் விவசாயம் சார்ந்த பகுதியாக இருப்பதால், விவசாயத்தினை பெருக்கும் வகையில் விவசாயிகள் அனைவரும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மூலம் தற்போது நடைமுறையிலுள்ள திட்டங்கள், விவசாய இடுபொருட்கள், விவசாயம் சார்ந்த இயந்திரங்களின் பயன்பாடு, மானிய உதவித்தொகை குறித்து அறிந்து கொள்ள வேண்டும். அதேபோன்று, விவசாயத்திற்கு அடுத்தப்படியாக இருப்பது கால்நடைகளை வளர்ப்பது. 

மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்போர்கள் தங்களது பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் அரசால் வழங்கப்படும் மானியத் தொகையினை பெறுவது குறித்தும், கூட்டுறவு சங்கங்கள் அமைப்பது குறித்தும், மேலும், பால் உற்பத்தியாளர் சங்கங்களை தரமானதாக நடத்தி அதிக பால் உற்பத்தியை பெருக்க வேண்டும். புதிய பால் உற்பத்தியாளர் சங்கங்களை உருவாக்க பால் உற்பத்தியாளர்கள் முன்வர வேண்டும். கால்நடைகள் வாங்குவதற்கு மானியத்தில் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கால்நடை வளர்ப்போர்கள் அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு தங்களது பொருளாதார நிலையினை உயர்த்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ்; மூலம், வீடு வீடாகச் சென்று, 45 வயதுக்கு மேற்பட்டவர்களையும், குறைபாடுகள் உள்ள மற்றவர்களையும் பரிசோதனை செய்து, தொற்றாத நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. வீடு இல்லாதவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டம், அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத்திட்டம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் என பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அரசின் திட்டங்கள் குறித்து துறைசார்ந்த அலுவலர்கள் வாயிலாக தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இளைஞர்கள் நூலகங்களை பயன்படுத்தி போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் மேற்கொண்டு அரசு நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென இவ்வாறு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், கேட்டுக்கொண்டுள்ளார்.

இம்முகாமில், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ச.சௌம்யா ஆரோக்கிய எட்வின், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜா.ராஜசெல்வி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் இளங்கோ, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கிருஷ்ணவேணி சின்னத்துரை, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தகுமாரி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் புஷ்பபாண்டி, நாங்குநேரி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory