» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஏப்.28ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்: வருவாய் அலுவலர் தகவல்

வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:33:42 AM (IST)

திருநெல்வேலியில் வருகிற 28ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள்/தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் 28.04.2025 அன்று பிற்பகல் 5.00 மணியளவில் திருநெல்வேலி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. 

மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory