» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாங்குநேரி வழக்கறிஞர் சங்கத் தேர்தல் : உயர்நீதிமன்றம் உத்தரவு

சனி 26, ஏப்ரல் 2025 3:26:36 PM (IST)



2024 டிசம்பர் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நாங்குநேரி வழக்கறிஞர் சங்க தேர்தலை நடத்திட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நெல்லை மாவட்டம், நாங்குநேரி வழக்கறிஞர் சங்கத்தில் 185 வழக்கறிஞர்கள் உறுப்பினராக உள்ளனர். 2024 - 25 ஆண்டிற்கான நாங்குநேரி வழக்கறிஞர் சங்க தேர்தலை சங்க விதிகளின்படி 2024 டிசம்பர் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியலை பின்பற்றாமல் 2025 மார்ச் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையர் ஒருவரையும் நியமித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

நாங்குநேரி வழக்கறிஞர்கள் சங்க 2024- 25 தேர்தலில் 2024 டிசம்பர் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தேர்தல் நடத்திடவும், தேர்தல் ஆணையரை நியமிக்க கோரியும் நாங்குநேரி வழக்கறிஞர் ஏ.சி.பேச்சிமுத்து தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை, தேர்தல் ஆணையராக மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வி. சுகுமாரை நியமித்தும், 2024 டிசம்பர் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நாங்குநேரி வழக்கறிஞர் சங்க தேர்தலை நடத்திடவும் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory