» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரிப்பு : மாணவ, மாணவியருக்கு எச்சரிக்கை
வியாழன் 8, மே 2025 8:22:19 AM (IST)
தூத்துக்குடியில் மாணவியரிடம் மர்ம நபர்கள் செல்போன் பறித்துச் சென்றுள்ள நிலையில் மாணவ, மாணவியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இது தொடர்பாக தூத்துக்குடி கின்ஸ் அகாடமி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "நேற்று மாலை சுமார் 7.00 மணியளவில் கின்ஸ் ஹாஸ்டல் மாணவியர் 3 பேர் ஷாப்பிங் போவதற்காக ஹாஸ்டலை விட்டு வெளியே வந்த போது அந்த வழியே பைக்கில் வந்த 3பேர் அவர்களிடம் இருந்த செல்போனை பறிக்க முயற்சி செய்து கடைசியில் ஒரு மாணவியிடம் இருந்த செல்போனை மட்டும் பறித்து சென்றுள்ளனர்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இது போல மாணவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்து சென்ற சம்பவம் தூத்துக்குடியில் நடந்து இருக்கிறது. ஆகவே நமது அகாடமியில் படிக்கும் மாணவ மாணவியர் தங்கள் செல்போன்களை யாரும் பறித்து செல்ல முடியாதவாறு பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டுகிறோம்.
மேலும், தூத்துக்குடியில் செயின் பறிப்பு அதிக அளவில் தொடர்ந்து நடந்து வருவதால் நமது அகாடமி மாணவியர் யாரும் இனிமேல் கண்டிப்பாக செயின் அணிந்து அகாடமிக்கு வர கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மக்கள்மே 8, 2025 - 12:39:51 PM | Posted IP 172.7*****
திருடர்களை என்கவுன்ட்டர் பண்ணுங்க எல்லாம் சரியாகிவிடும்
ரா.லேனஸ்மே 8, 2025 - 09:40:14 AM | Posted IP 162.1*****
செயின் அணிந்து வருவது குற்றமா? செயின் பறிப்பு குற்றமா? கல்வி நிலையங்களே இத்தகைய முடிவு எடுப்பது சரியல்ல. செயின் பறிப்பவர்களை கண்டு பிடித்து சரியான நடிவடிக்கைக்கு ஏற்பாடு செய்வதே இளம் மாணவ மாணவியர்க்கு உதவியாக இருக்கும். காவல் துறை திறமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ...
மேலும் தொடரும் செய்திகள்

பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் : அரசுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
வெள்ளி 28, நவம்பர் 2025 12:16:08 PM (IST)

கருமேனியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் சபாநாயகர் மு.அப்பாவு..!
வெள்ளி 28, நவம்பர் 2025 11:28:14 AM (IST)

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த வாலிபர் கைது
வெள்ளி 28, நவம்பர் 2025 8:38:33 AM (IST)

தென்காசியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா : திமுக வழக்கறிஞர்கள் கொண்டாட்டம்!
வெள்ளி 28, நவம்பர் 2025 7:52:04 AM (IST)

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி இடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 27, நவம்பர் 2025 5:06:22 PM (IST)

குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
வியாழன் 27, நவம்பர் 2025 4:24:35 PM (IST)





s.sharmaமே 9, 2025 - 05:15:11 PM | Posted IP 162.1*****