» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது : பைக் பறிமுதல்
வெள்ளி 9, மே 2025 8:20:51 AM (IST)
தூத்துக்குடி அருகே பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள சிவகளையைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி பேச்சியம்மாள்(33). இவர் தனது சொந்த ஊரான தெய்வச்செயல்புரத்தில் நடைபெற்ற கோயில் கொடைவிழாவில் பங்கேற்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு கீழத் தெரு வழியாக நடந்து வந்துகொண்டிருந்தாராம்.
அப்போது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர், பேச்சியம்மாள் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினாராம். இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், தாளமுத்துநகர் சிலுவைப்பட்டியை சேர்ந்த சிலுவைராஜ் மகன் அந்தோணி லாசர்(32) என்பவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, நகையை மீட்டதுடன், பைக்கை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெள்ள பாதிப்புகளைத் தடுக்கப் போர்க்கால நடவடிக்கை : ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு!
சனி 16, மே 2026 11:07:43 AM (IST)

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)

கோடை மழையால் குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
சனி 9, மே 2026 9:00:15 AM (IST)



ஆதி திருவைகுண்டம்மே 9, 2025 - 09:15:35 AM | Posted IP 172.7*****