» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஜீன் 3 வரை 10 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!
வெள்ளி 23, மே 2025 8:12:47 AM (IST)
மே 23 முதல் ஜீன் 3 வரை கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் மேற்கு கடற்கரை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்யும்.
அதன்படி, மே 23 ந் தேதி முதல் ஜூன் 3 வரை 10 நாட்களுக்கு கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் - வால்பாறை, நீலகிரி - கூடலூர், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு மிக கனமழை எச்சரிக்கை. சில இடங்களில் 24 மணி நேரத்தில் அதிகமாக 200 மி.மீ. மழை பெய்யக்கூடும்.
பொதுவாக இந்த பருவமழை அதிகரிப்பு ஜூன் மாதத்தில் ஏற்படும். ஆனால் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மழைக்கான அறிகுறியாக இருப்பதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் இது விடுமுறை காலம் என்பதால், குறிப்பாக அதிக மழை பெய்த பிறகு மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மலைகளுக்கு பயணிக்கும்போது சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனால் இடுக்கி, குடகு, வயநாடு, நீலகிரியில் உள்ள கூடலூர் - அவலாஞ்சி பகுதி, வால்பாறை, சிக்மகளூர் மலைகள், கர்நாடக கடலோரப் பகுதிகள், உடுப்பி, ஷிமோகா மலைகள், உத்தர கன்னடம், வடக்கு கடற்கரை கேரளா போன்ற இடங்கள் அதிக ஆபத்தில் உள்ளன.
கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகமலை ஆகியவை பயணிக்க பாதுகாப்பானவை. மேற்கு கடற்கரை மற்றும் மலைத் தொடர்களில் பருவமழை ஆரம்பித்த உடன் சென்னையில் மழைக்கு வாய்ப்பு குறைய ஆரம்பித்து விடும் என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொழில் முனைவோர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி : புதிய தயாரிப்புகளை ஆட்சியர் வெளியிட்டார்!
சனி 24, மே 2025 5:28:05 PM (IST)

நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்: மிக கனமழைக்கு வாய்ப்பு!
சனி 24, மே 2025 5:14:34 PM (IST)

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
சனி 24, மே 2025 3:39:06 PM (IST)

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை எல்லை மீறி செயல்படுகிறது: சபாநாயகர் அப்பாவு
வெள்ளி 23, மே 2025 11:21:28 AM (IST)

கண்மாய், குளங்களிலிருந்து மண் எடுத்துச் செல்ல அனுமதி : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வெள்ளி 23, மே 2025 10:59:59 AM (IST)

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணியிடம் 30 பவுன் நகை திருட்டு: மர்மநபர்கள் கைவரிசை
வெள்ளி 23, மே 2025 8:38:36 AM (IST)
