» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்: மிக கனமழைக்கு வாய்ப்பு!
சனி 24, மே 2025 5:14:34 PM (IST)
நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 8 நாட்கள் முன்னதாக தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கு அரபி கடலில் உருவான காற்றழத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
தூத்துக்குடி, பாம்பனில் 3ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழை கொட்டும். இதனால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவையில் 27ஆம் தேதி மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்யும். கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது இந்தாண்டு மே வரையிலான காலத்தில் 92 சதவீதம் கூடுதலாக மழைப்பொழிவு பதிவு. இவ்வாறு அனுஜா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொழில் முனைவோர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி : புதிய தயாரிப்புகளை ஆட்சியர் வெளியிட்டார்!
சனி 24, மே 2025 5:28:05 PM (IST)

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
சனி 24, மே 2025 3:39:06 PM (IST)

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை எல்லை மீறி செயல்படுகிறது: சபாநாயகர் அப்பாவு
வெள்ளி 23, மே 2025 11:21:28 AM (IST)

கண்மாய், குளங்களிலிருந்து மண் எடுத்துச் செல்ல அனுமதி : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வெள்ளி 23, மே 2025 10:59:59 AM (IST)

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணியிடம் 30 பவுன் நகை திருட்டு: மர்மநபர்கள் கைவரிசை
வெள்ளி 23, மே 2025 8:38:36 AM (IST)
_0_1747968288.jpg)
ஜீன் 3 வரை 10 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!
வெள்ளி 23, மே 2025 8:12:47 AM (IST)
