» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம்: ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவு

திங்கள் 2, ஜூன் 2025 5:52:19 PM (IST)



முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் அறிவுறுத்தினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் இரா.சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப மனுக்கள் பதிவு செய்யப்பட்டதோடு, அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொது பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்கள். 

மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். தொடர்ந்து, நாங்குநேரி வட்டம் களக்காடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவர் விடுதியில் தங்கி களக்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பயின்ற மாணவன் சு.சிவா என்பவர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 546 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் முதலிடம் பிடித்துள்ளார். 

இன்று மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவனை ஊக்கவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா , திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) இலக்குவன் , தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசெல்வி உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory