» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாணவிக்கு பாலியல் தொல்லை: துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் மும்பையில் கைது
சனி 7, ஜூன் 2025 10:35:25 AM (IST)
தென்காசி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் மும்பையில் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் சுரண்ைட பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன் (58). இவர் தனியார் டிராவல்ஸ் ேமலாளராக வேலை பார்த்து வந்தார். தென்காசி அருேக உள்ள கிராமத்தில் இவரது நண்பர் வீடு உள்ளது. நீலகண்டன் அடிக்கடி அந்த வீட்டிற்கு சென்றுவந்தார். அப்போது நண்பரின் மகளான 12-ம் வகுப்பு மாணவியுடன் பேசி வந்தார்.
கடந்த 9-2-2023 அன்று அந்த மாணவியின் தம்பி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த நீலகண்டன், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், துப்பாக்கியை காட்டி இந்த விஷயத்தை வெளியே சொன்னால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மாணவி, ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாரை பெற்று கொண்டு வழக்குப் பதிய கால தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, நீலகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த நீலகண்டன் மீது காவல் நிலையத்தில் கடந்த மே 17-ந் தேதி வழக்குப்பதிவு செய்யபட்டது. இதை அறிந்த அவர் தலைமறைவானார். போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். நீலகண்டன் மும்பையில் இருப்பதாக தனிப்படைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, நீலகண்டனை கைது செய்து அழைத்து வந்தனர். பின்னர் அவர் தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்வினைக் கொண்டாடுவோம் சிறப்பு பயிலரங்கம் : நடிகர் தாமு பங்கேற்பு
வெள்ளி 20, ஜூன் 2025 8:47:57 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
வெள்ளி 20, ஜூன் 2025 5:45:04 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:28:41 PM (IST)

நெல்சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 20, ஜூன் 2025 3:55:50 PM (IST)

அரசு பஸ்சின் அச்சு முறிந்து சாலையில் ஓடிய சக்கரங்கள்: 3 மாணவர்கள் படுகாயம்!!
வெள்ளி 20, ஜூன் 2025 3:25:32 PM (IST)

வெளிநாட்டில் வேலை தருவதாக ரூ.10.87 லட்சம் மோசடி வழக்கில் பெண் கைது!
வெள்ளி 20, ஜூன் 2025 8:53:23 AM (IST)
