» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்: ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் ஆஜர்!
வெள்ளி 6, ஜூன் 2025 12:31:29 PM (IST)
அம்பையில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட பிரிவு காவல் நிலையங்களில் கடந்த 2023ல் விசாரணைக்காக வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது. இவ்விவகாரத்தில் அப்போதைய அம்பா சமுத்திரம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங், காவல் ஆய்வாளர் ராஜ குமாரி உள்ளிட்ட 14 காவல் துறை அலுவலர்கள் மீது குற்ற முகாந்திரம் இருப்பதாக சிபிசிஐடி போலீஸாரால் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் ஆஜராகி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெள்ள பாதிப்புகளைத் தடுக்கப் போர்க்கால நடவடிக்கை : ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு!
சனி 16, மே 2026 11:07:43 AM (IST)

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)

கோடை மழையால் குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
சனி 9, மே 2026 9:00:15 AM (IST)


