» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது : சமூக ஆர்வலருக்கு சபாநாயகர் பாராட்டு!
திங்கள் 9, ஜூன் 2025 3:46:14 PM (IST)

முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது பெற்ற சமூக ஆர்வலருக்கு தமிழ்நாடு சட்டபேரவைத் தலைவர் மு.அப்பாவு பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 05.06.2025 அன்று நீர்நிலை பாதுகாப்பில் தன்னிகரற்று பணியாற்றியமைக்காக வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த ஆ.லூர்துராஜ் அவர்களுக்கு முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது - 2025யினை வழங்கினார்கள். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (09.06.2025) முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது பெற்ற சமூக ஆர்வலரை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், முன்னிலையில் சால்வை அணிவித்து பாராட்டினார்கள்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த ஆ.லூர்துராஜ் என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக கல்லிடைக்குறிச்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றினை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகிறார். ஆற்றில் கிடக்கும் துணிகளை எடுப்பது, ஆற்று ஓரமாக மரங்களை நட்டு ஆற்றோர சோலைகளாக உருவாக்குவது போன்ற பணிகளை கல்லிடைக்குறிச்சியில் உள்ள தன்னார்வலர்களுடன் ஒருங்கிணைத்து மேற்கொண்டு வருகின்றார். மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்யப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 05.06.2025 அன்று முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது மற்றும் ரூ.1 இலட்சத்திற்கான காசோலை ஊக்கதொகையாக வழங்கப்பட்டது.
இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீர்நிலை பாதுகாப்பில் தன்னிகரற்று பணியாற்றியமைக்காக ஆ.லூர்துராஜ் அவர்களை நேரில் அழைத்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், முன்னிலையில் சால்வை அணிவித்து பாராட்டினார். இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ந.சரவணன், சேரன்மகாதேவி கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்வினைக் கொண்டாடுவோம் சிறப்பு பயிலரங்கம் : நடிகர் தாமு பங்கேற்பு
வெள்ளி 20, ஜூன் 2025 8:47:57 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
வெள்ளி 20, ஜூன் 2025 5:45:04 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:28:41 PM (IST)

நெல்சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 20, ஜூன் 2025 3:55:50 PM (IST)

அரசு பஸ்சின் அச்சு முறிந்து சாலையில் ஓடிய சக்கரங்கள்: 3 மாணவர்கள் படுகாயம்!!
வெள்ளி 20, ஜூன் 2025 3:25:32 PM (IST)

வெளிநாட்டில் வேலை தருவதாக ரூ.10.87 லட்சம் மோசடி வழக்கில் பெண் கைது!
வெள்ளி 20, ஜூன் 2025 8:53:23 AM (IST)
