» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆளுநரிடம் பட்டம் பெறாமல் புறக்கணித்த மாணவி: திருநெல்வேலி பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு

புதன் 13, ஆகஸ்ட் 2025 3:09:51 PM (IST)



திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், மாணவி ஒருவர் ஆளுநர் ஆர்.என் ரவியிடம் இருந்து பட்டத்தை பெறாமல் தவிர்த்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி. கலையரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி தலைமையேற்று மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் ந. சந்திரசேகர் வரவேற்று, அறிக்கை வாசித்தார். சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் ஜே. சாக்ரட்டீஸ், தேர்வாணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் மொத்தம் 759 மாணவ, மாணவியருக்கு ஆளுநர் பட்டங்களை வழங்கினார். அதில் 109 பேர் (மாணவர்கள் 13, மாணவிகள் 96) தங்கப்பதக்கமும், 650 பேர் (மாணவர்கள் 108, மாணவிகள் 542) முனைவர் பட்டங்களும் பெற்றனர். இப்பட்டமளிப்பு விழாவில் மொத்தமாக 11638 மாணவர்கள், 25738 மாணவிகள் என்று மொத்தம் 37376 பேர் பட்டம் பெற்றனர். மும்பையிலுள்ள இந்திய புவி காந்தவியல் நிறுவன இயக்குநர் பேராசிரியர் அ.பி. டிம்ரி பட்டமளிப்பு விழா பேருரையாற்றினார்.

ஆளுநரை புறக்கணித்த மாணவி 

விழாவில் மைக்ரோ பைனான்ஸ் பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்ற ஜின் ஜோசப் என்ற மாணவி ஆளுநர் ஆர்.என் ரவியிடம் இருந்து பட்டத்தை பெறாமல் தவிர்த்து, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பட்டத்தை பெற்றுக் கொண்ட நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுவதால் ஆளுநர் கையில் பட்டத்தை வாங்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


மக்கள் கருத்து

munaivar pattathai maru ayvu seygaAug 13, 2025 - 04:41:49 PM | Posted IP 162.1*****

intha maanavi petra munaivar pattathai maru ayvu seyyavendum.

Kadum Nadavadikkai thevaiAug 13, 2025 - 04:40:23 PM | Posted IP 104.2*****

intha manavi meethu kadum nadavadikkai edukka vendum

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory